Sunday 23 December 2012

தீட்சை பெற தகுதியிருப்பின் நன்கு சித்திக்கும்



அம்மா தீட்சை பெற தகுதியிருப்பின் நன்கு சித்திக்கும் ,இல்லாவிடின் தகுதி வாய்த்ததும் சித்திக்கும்,தகுதி அடைய கோபத்தை தூக்கிஎறி ,பதியையும் பெற்ற அன்னையையும் போற்று,யாரையும் தூஷிக்கதே ,எங்களிடம் விட்டு விடு.  10 வகை தீட்சையாம் அவனியிலே முதல் தீட்சை 1 மண்டலம் செப்பு 
என்ற மந்திர தன்னை 48 நாட்கள் உருவேற்று உரு என்பது அற்பம் 108 மத்திமம் 1008 ,உத்தமம் லட்சத்தி எட்டு  ,இத்தனை ஜெபிக்க கடினம் உங்களுக்கு 10 முடிந்தால் மீண்டும் 1 தொடங்கி பூர்த்தி செய்து கொள்.இப்படியே தொடர்ந்து ஜெபித்துகொள்ளலாம் .மனதிற்குள் செபித்தால் தான் மந்திரத்திருக்கு பலன் அதிகம் .பஞ்ச கற்பம் ,இஞ்சிசுக்கு கடுக்காய் அலட்சிய படுத்துகிறாய் ,தேகம் செழித்தால்தான் சித்திகள் கூடும்,சித்திகள் கூடிய பின் எமனுக்கும் அஞ்சவேண்டாம் .சொல்லுகிற உணவு,வைத்தியத்தை,சொல்ல போகின்ற மூலிகையை முறையாய் பின்பற்று ,இனி செய்யாது  போனால் நானேதும் செப்ப மாட்டேன். சொல்லுகிற ஒவ்வொரு வாக்கிலும் அனேக சூட்சும ரகசியங்கள் உண்டு.விபூதியி பிரசாதமாக உன்,நாக்கு சுவைக்கு பயன் படுத்தே,நீரில் இட்டு வடிகட்டி மட்டுமே விபூதி பருக வேண்டும்.வாயில் போட்டு சுவைக்க கூடாது ஒரு சிட்டிகை போதும் சொம்தமாக விபூதி தயாரிக்கும்போது 1 நாளைக்கு 1 தேகரண்டி பயன்பயன்படுத்தலாம்.தீட்சை பெற்றால்தான் குருவருள் திருவருள் எல்லாம். செய்யவேண்டிய ஜெபமும் வேலையும் அநேகம் இருக்க சமையல் குறிப்புகளிலும் தொலை காட்சியிலும் மூழ்கி கிடப்பதென்ன.      

No comments:

Post a Comment