Sunday, 23 December 2012

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி



"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி
நாயனாரே போற்றி 
வியாசபெருமானின் சீடரே போற்றி 
ஜோதி மர  பொந்தில் த ஞானம் கண்டவரே போற்றி 
அகப்பேயை  அடக்கிய சித்தர் பெருமானே போற்றி 
திருவையாற்றில் சித்தி அடைந்தவரே போற்றி 
பித்ரு தோஷம் களைபவரே போற்றி 
பூத பிரேத செய்வினை சேட்டைகளை களைபவரே போற்றி 
மன நோய்க்கு வாய்த்த மா மருந்தே போற்றி 
ஓம் உத்தம குருவே எந்நாளும் எங்களை காக்கும் அய்யனே போற்றி

அளக நன்னுத லாய்ஓர் அதிசயம்
களவு காயம் கலந்த இந்நீரில்
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளும் கபாலமே.

அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு வியப்பு. உடம்பில் மறைமுகமாகச் சென்று (உணர்வாகிய) இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும். இத்துடன் கடுக்காய்த் தூளும் சேர்த்தால்பஞ்ச கல்பம் என்பர்.

பஞ்ச கற்பம் தேய்த்து வரவும் ஒரு நாளும் விட வேண்டாம் முடிந்தவரை தினமும் செய்க.கிரக தோஷம் பாவ பிணி அகற்றும்.தெய்வ வாசம் தேகத்தில் நிகழும் .
கலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் அன்றாட வழக்கமாகட்டும் தாயே அற்புத கற்பம் இது .
அற்ப விஷயங்களுக்கெல்லாம் அழுது மேலே ஏறுகிற குண்டலினியை கீழிறங்கி வர செய்யாதே,பொறுமை காப்பாய் .
உணவில் கவனம் அவசியம் 1 வேளை மட்டும் அரிசி உணவு கொள் ,கருணை கிழங்கு அமிர்தம்,உருளை தினமும் உண்டால் விஷம்,அது மூப்பு தரும்.
சீக்கிரம் படுத்து சீக்கிரம் எழு ,6 வேளை பூசை இறைவனுக்கு ஏன் தெரியுமா அருள் என்பது சுலபமல்ல .சொன்ன நேரத்தில் பூஜை முடித்துவிட்டால் போதுமா? மற்ற நேரங்களில் தியானம்,ஜெபம் செய்யக்கூடாதா? நன்கு படிக்கும் மாணாக்கன் ,அடிக்கடி படிக்கும் மாணாக்கன் விரைந்து சாதிக்கிறான் முதலிடம்  பிடிக்கிறான் அம்மா புரிந்து கொள்.  கோபம் அதிக தூக்கம்,அதிக உணவு,அதிக பொழுது போக்கு இவை சித்தியடைய தடை.சித்தி  பெற்றுவிட்டால் எல்லாம் சுலபம்,அனால் சித்தி பெறுவது சுலபமல்ல ,உன் ஜெபமும் தியானமும்  நூற்றில் கால் பங்கு கூட இல்லை   


"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி
நாயனாரே போற்றி 
வியாசபெருமானின் சீடரே போற்றி 
ஜோதி மர  பொந்தில் த ஞானம் கண்டவரே போற்றி 
அகப்பேயை  அடக்கிய சித்தர் பெருமானே போற்றி 
திருவையாற்றில் சித்தி அடைந்தவரே போற்றி 
பித்ரு தோஷம் களைபவரே போற்றி 
பூத பிரேத செய்வினை சேட்டைகளை களைபவரே போற்றி 
மன நோய்க்கு வாய்த்த மா மருந்தே போற்றி 
ஓம் உத்தம குருவே எந்நாளும் எங்களை காக்கும் அய்யனே போற்றி

No comments:

Post a Comment