Thursday, 27 December 2012

பொன்மொழிகள்

பொன்மொழிகள்
எ ஆ அ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க ,கா ,கி கீ
கு கூ
கே கெ
கை
கோ
கொ
தகுதி
******
பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
வழி கிடைக்க வழி விடு
************************
    நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
 'கடன்காரன்'
****************
    நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.
ஓய்வு
*******
ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.

மனச்சாட்சி
************
அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.
திறமை
********
செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.
உதவி
*******
உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.

மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.

எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.

வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.

"என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".

கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.
”சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்

No comments:

Post a Comment