****ஓம்கிலி அங்உங்" கெண்ணே ஆதி கணபதி*** 208
ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியை ப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி
இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும்.
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர்அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள்எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.
அகத்திய பூரண சூத்திரம்
"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"
- அகத்தியர் -
சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....
"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.
அகத்திய தரிசனம்
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தானஅகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் .தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
thank u
ReplyDeletethank you
ReplyDeleteSIM VAM AM UM MAM AGASTHEESA
ReplyDelete