Sunday 23 December 2012

7 முத்திரை


  பிள்ளாய் , தோரணை உயர்த்து,விளம்பரம் கொடு ,டீ வியை நிறுத்து,சீக்கிரம் படு சீக்கிரம் எழு  ,அழுவதை நிறுத்து ,சந்தேகம் விடு ,கொடிய நரக பாவ வினைகளில் விழுந்துவிட்டு உடனே எழ முயல்வது அநியாய பரிகாரம்,முறைப்படிதான் நடக்க வேண்டும் ,பிரம்ம ரகசியம் இது ,எல்லாம் சொல்ல முடியாது ,மருமகனிடம்  சின்ன சினுக்கல்களும் ஆகாது ,அமைதி கார் ,நான் இருக்கிறேன் ,இந்த வாக்கு நான் சொன்னதை நீ கடை பிடித்தால்தான் ,இல்லாவிடில் தேவ கட்டளை மீறிய பாவம் எனக்கு சேரும் ,என் பேச்சை கேட்பதே இல்லை,உன் மகன் உனக்கு  எடுத்து சொல்ல தூண்டுவது நான்தான்.  
அபிமன்யு சக்கரத்தில் மாட்டிக்கொண்டது போல் நீங்கள் செய்த வினைக்காக உன் தலைப்பிள்ளை அவதியுறுகிறது,உங்களுக்கு வலிக்க வேன்டுமென்றால் தலைப்பிள்ளைக்கு வலிக்க வேண்டும் என்பது எதிரிகளின் கணக்கு.முறைப்படி கவனிக்காது போனால் அவனை பூமி இனியும் சுமக்காது,அப சொல் சொல்லக்கூடாது என் வாயால் ஆனால் நீ சொல்ல வைக்கிறாய்,அவன் ஆகாரம் ,பரிகாரம்,வழிபாடு ,தேக பயிற்சி அத்தனையும் கண்காணி,என் வார்த்தையை ஒரு நாள் கூட கடை பிடிக்கவில்லை நீ சரியாக,அடிக்கடி தினத்தில் அமர்ந்தால் என்ன உனக்கு? அழாதே  அழுகை வந்தால் என் கிருஷ்ணனும் குருநாதரும் இருக்கிறார் என்று இன்னும் அதிகமாக மனதில் ஜெபம் செய் ,உனக்கு தெரியுமா இது காரும் செய்த பூஜையால் கண்டத்திலிருந்து தப்பித்திருக்கிறீர்கள்,கிளிப்பிள்ளையை போல் சொல்வதை செய்,செவ்வாய் அப்ரு உன் இளைய மகளை முருகனுக்கு 1 நே தீபம் போடச்சொல்,பெரிய மகளை ஞ்சாயிரன்று  சிவனுக்கு நெய்தீபம் போடா சொல் 2 பேருக்கும் 12 வாரம் .கண்ட இடங்களில் திரியும் உன் கணவனை காலை மாலை இரவு 1008 உரு போட சொல் நான்  தந்த மந்திரத்தை... இறைவன் மேல் ஆணை அப்பிள்ளைக்கு யோகமான யோகம் சித்திக்கும் சிறிதும் நம்பிக்கையை கைவிடாமல் ஜெபிக்கச்சொல்







"சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாயகுரு முத்திரையைச் சொல்லக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தி
பதிவாக இருகரமும் ஒன்றாய்க் கூட்டி
சுத்தமுடன் லாடவிழி கண்ணின் நேரே
தொழுது மனம் நினைத்தபடி சுத்தமாக
முக்தியுடன் வரங்கொடுக்க வேண்டுமென்று
மோனமுடன் மனோன்மணியை தியானம்பண்ணே"


மோகினி முத்திரை!..சோபினி முத்திரை!

யோக முத்திரைகள் வரிசையில் இன்று “மோகினி முத்திரை” மற்றும் “சோபினி முத்திரை” பற்றி பார்ப்போம். பிரம்ம முகூர்த்தத்தில் இந்த முத்திரைகளை ஒவ்வொன்றையும் தலா ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.
மோகினி முத்திரை"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.
சோபினி முத்திரை"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

திருவினி முத்திரை...! 

முத்திரைகள் பற்றிய இந்த தொடர் அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது. கடந்த மூன்று தினங்களாய் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாராட்டி மின்னஞ்சல்கள் வந்திருக்கிறது. அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் எனது பணிவான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். நேரமின்மையினால் தனித்தனியே பதில் அனுப்பிட இயலாததால், தயவு செய்து யாரும் தவறாக எண்ணிட வேண்டாம்.
மிக முக்கியமாக, பலரும் கேட்டுக் கொண்ட படி இந்த யோக முத்திரை பதிவுகளைத் தொடர்ந்து தேக முத்திரைகளைப் பற்றி தனியே விவரமாய் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைய பதிவில் யோக முத்திரை வரிசையில் மூன்றாவதும், மிக முக்கியமானதுமான “திருவினி” முத்திரையைப் பற்றி பார்ப்போம்.

தன்வந்திரி தனது ”தன்வந்திரி வைத்தியம்1000” என்ற நூலில், திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.
யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

யோனி முத்திரை,,!, அபான முத்திரை..!  

யோக முத்திரைகள் வரிசையில் இன்றைய பதிவில் “யோனி முத்திரை” மற்றும் “அபான முத்திரை” பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
யோனி முத்திரை
யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.
அபான முத்திரை

அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.
"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"
- தன்வந்திரி வைத்தியம் 1000 -
மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்

சுவகரண முத்திரை 

யோக முத்திரை வரிசையில் கடைசி முத்திரையான சுவகரண முத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.
"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -
சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.
இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....

No comments:

Post a Comment