Tuesday, 22 January 2013

மக்காச் சோளம்

 மக்காச்சோளக் கதிர்ஜடை நார்:   
சோளக்கதிர் ஜடை முடியை நிழலில் உலரவைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் 12 கிரா ம் மக்காச்சோளக் கதிர் ஜடைநாரைப் போட்டுக் கொதிக்க வைத்து 'டீ' போன்று தினம் இருமுறை குடித்து வந்தால் 
 1 .சிறுநீரகவலி   2. சிறுநீர் அடைப்பு  3. சிறுநீர்ப்பாதைப்புண்   4. வீக்கம் குணமடையும்   5. தாராளமாகச் சிறுநீர் பிரியும்   6. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.   ஆறு கிராம் சோளக்கதிர் ஜடைநாரை ஒரு கப் நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் குணமாகும் நோய்கள்:   1. இதய நோய்கள்   2. இந்திரியப்பை புண், வீக்கம்   3. குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல்   4. பித்தப்பை கற்கள்   5. மஞ்சள் காமாலை   6. கல்லீரல் வீக்கம்   7. கல்லீரல் செயலிழப்பு   8. ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம்    

 மக்காச் சோளக் கதிர் சக்கை:  

 விதைகளை எடுத்தபின் சக்கையை வீசி விடுகிறோம். ஆனால் அதிலும் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்களைப் படியுங்கள்.  சோளக்கதிர் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு கிராம் எடுத்து தேனில் கலந்து தினம் இருவேளை சாப்பிட,   1. மூலக்கட்டியில் இருந்து அதிகளவில் வெளியேறும் ரத்தம் கட்டுப்படுத்தப்படும்.   2. அதிகளவு மாதவிலக்கு ஏற்படுவதையும் தடுக்கும். இச்சாம்பலைச் சிறிது உப்பு கலந்து சாப்பிட,   1. இருமல் நீங்குகிறது   2. சிறுநீரைத் தாராளமாகப் பிரியச் செய்கிறது   3. சிறுநீர்க் கற்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.   இவையெல்லாம் யுனானி மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளன. பயன்படுத்திப் பாருங்களேன்.













No comments:

Post a Comment