ஆண்மைக்கு
*ஜாதிக்காய்:-
**************
இந்த ஜாதிக்காய் மட்டுமே உடலுறவிற்கும், ஆண்மை விருத்திக்கும், குறி விரைப்புக்கும் மிகப் பலமான பலம் அளிக்க வல்லது.
ஒரு முருங்கை மரத்தில் சதுரமாக வெட்டி த் துளைத்து அதற்குள் ஒரு சாதிக்காயை வைத்து அதே முருங்கைக் கட்டையால் மூடி ஒரு துணியால் மூடி காற்றுப் புகாமல் கட்டி, வைத்து 48 நாட்கள் கழித்து எடுத்து , அதில் ஒரு சிறு துண்டு எடுத்து 5 வெற்றிலை , சிறு துண்டு கொட்டைப் பாக்கு , தேவையான அளவில் சுண்ணாம்பு , ஒரு மொட்டு நீக்கிய கிராம்பு, சிறு துண்டு சாதிப் பத்திரி , வைத்து தாம்பூலம் போட்ட பின் நன்கு சுண்டக் காய்ச்சிய பாலருந்தினால் அருமையான ஆண்மை எழுச்சியுண்டாக்கும்
தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலை போடுவது, என்று அழைக்கப்படுகிறது.
ஒரு தாம்பூலம் என்பது
************************
(1)ஐந்து வெற்றிலை(குறைந்த பட்சமாக)
(2)சிறு துண்டு சாதிக்காய்
(3)மொட்டு நீக்கிய கிராம்பு 2
(4)சாதிப் பத்திரி
(5)ஒரு ஏலக்காய்
(6)கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு
(7)தேவையான அளவு சுண்ணாம்பு
(8)குல்கந்து
(9) சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்)
(10)பவள பற்பம்
வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து(வெற்றிலை பற்றிய பழ மொழிகள்(1)வெல மேல வெல வச்சுக் கொடுத்தாலும் இல மேல இல வச்சு வெற்றிலை போடக்கூடாது,(2)ஆனை மேல அம்பாரியில் போனாலும் குப்புற விழுந்த வெற்றிலையை குனிஞ்சு எடுக்கணும்) சுண்ணாம்பு தடவி நடு நரம்பு, வெற்றிலை நுனி,வெற்றிலைக் காம்பு இவற்றை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்(இவற்றை நீக்காவிட்டால் வயிற்றுப் புண்ணான அல்சர் உண்டாகும்.)
முதலில் சிறு துண்டு சாதிக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, சாதிப் பத்திரி, ஒரு ஏலக்காய், கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு இவைகளை வைத்து,சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வாயில் போட்டு நன்கு மென்று
(1)முதலில் ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்
(2) இரண்டாவதாக ஊறும் எச்சில் ஆலகால விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(3) மூன்றாவதாக ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(4)நான்காவதாக ஊறும் எச்சில் சமம், அத்துடன் குல்கந்து,சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்),பவள பற்பம் வைத்து நன்றாக வெற்றிலையை மென்று
(5)முதலில் ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(6)இரண்டாவதாக ஊறும் எச்சில் தேவாமிர்தம் அதை விழுங்கிவிட வேண்டும்.
(7)மூன்றாவதாக ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(8)நான்காவதாக வருவது சக்கை.அதைத் துப்பிவிட வேண்டும்.
இவ்வாறு வெற்றிலை போட்டால் வயிற்றில் உற்பத்தியாகிற அதிக அமிலம், அதனால் உண்டாகும் வயிற்றுப் புண்,வாயு,அதிக செரிமானமின்மை அனைத்தும் போகும்.
*a *அதிமதுரம்:-அதிமதுரம் பெயரிலேயே மதுரம் கொண்டது. மதுரம் என்றால் இனிமையானது என்று பொருள் அதி மதுரம் என்றால் அதீதமான இனிமையானது என்று பொருள்.இது உடலில் தனது மதுரத் தன்மையை பரவவிட்டு உடலை மிக,மிக இனிமையாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.இந்த அதி மதுரம் ஆயுதங்களினால் உண்டான காயம் , வாதாதிகளாற் பிறந்த நிஜ விரணம் ,நாவறட்சி , வெண்குட்டம் , பயித்தியம் , நேத்திர நோய் , உன்மாதம் , விக்கல் ஐந்து விதமான வலிகள் , பயித்தியம் ,எலும்புருக்கி , மூத்திர கிரிச்சரம் , கிரிச்சரம் , வெட்டை , மத மூர்ச்சை , பித்த விஷ பாகம் , சுரம் , வாத சோணிதம் , காமாலை , தாவர சங்கம விஷங்கள் , குய்ய ரோகம் , சுக்கில நஷ்டம் , புகையிருமல் ,முகவாதம்,சிர நோய் , ஓஷ்ட ரோகம் , சோம ரோகம் , ஸ்தன வித்திரிக் கட்டி (மார்பக புற்றுக்கட்டிகள் ) , இவைகள் போகும்.இது கபஹரகாரி , அந்தர்ஸ்நிக்தகாரி , இளகு மலகாரி , ரக்தஸ்தம்பனகாரி , ஸோணகாரி , பித்தகாரி , தாதுஷீணரோதி போன்ற செய்கைகள் கொண்டது .
பாதாம் பருப்பு:-
***************
பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் பாதாம் பருப்பு இதில் மிகச் சிறந்தது.இதை வாதுமைப்பருப்பு,அடப்பம் வித்து என்றும் அழைப்பார்கள்.கலவியில் அதிக விருப்பம் உண்டாகும்.இது அந்தர்ஸ்நிக்தகாரி , காமவிர்த்தினி போன்ற செய்கைகள் கொண்டது .இரவில் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காலையில் 4 முதல் 6 பருப்புகள் வரை சாப்பிட்டு வர உடலிலும் , இரத்தத்திலும் உள்ள அதீத கெட்ட கொழுப்பு குறையும்.உடல் உள்ளுறுப்புக்கள் சுத்தப்படுத்தப்படுவதுடன் , உள்ளழலையும் சாந்தப்படுத்தும் (உள் அழல் என்பது உள் உஷ்ணம் அதீதமான பெண் புணர்ச்சியால் வந்த வெட்டை , மற்றும் கட்டில்லாத கைப்பழக்கம் இவற்றால் அதிகப்பப்பட்டு உடலை சிதைக்கும் நிலையே இது ).தலை நரம்புகள் , மூளை , கண்கள் முதலியவை பலம் பெறும்.மார்பு எரிச்சல் , இருமல் , உள்வறட்சி , சுவாசம் , சூலை , உதிரச் சிக்கல் முதலியவை குணமாகும்.
19) வெளிமடக்கி:-தொட்டாற் சுருங்கிச் செடியை உடலில் எந்த விதமாகவாவது சேர்த்துச் சாப்பிட்டுவிட்டால் அதன் பின்னர் ஆண்குறியின் விரிவடையும் தன்மை பாதிக்கப்பட்டே இருக்கும்.சில பர ஸ்திரீப் பெண்கள் தொட்டாற் சுருங்கியை சாப நிவர்த்தி எடுத்து அதன் வேரை செய்து இடுப்பில் கட்டி கொள்வார்கள் .அவர்களைத் தொட்டாலே குறி விரைப்பிருக்காது.அவர்கள் உன்னால் இது கூட முடியவில்லையா என்று கூறிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.அவர்கள் உடல் நோகாமல் பணம் சம்பாதிக்க இப்படியும் காரியங்கள் செய்கிறார்கள்.இவர்களிடம் போய் உடலுறவிற்கு முயற்சி செய்பவர்கள் மன ரீதியாக ’’நமக்கு பெரும் ஆண்மைக் குறைவு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணுவார்கள்”.இது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.உண்மை அதுவல்ல .
இது போன்று சக்தியுள்ள தொட்டாற்சுருங்கியை எதிர்த்து நிற்பது இந்த வெளி மடக்கி .இது தொட்டாற் சுருங்கிக்கு நேர் எதிரான செயல்பாட்டை உடையது . தொட்டாற் சுருங்கி உள்பக்கம் சுருங்கும் வெளிமடக்கி நேர் எதிராக வெளிப்பக்கம் மடங்கும் செயல்பாட்டை உடையது . தொட்டாற்சுருங்கியை சாப்பிட்டதால் உண்டான குறி சுருங்கிய பாதிப்பை இது போக்குவதோடு , தொட்டாற் சுருங்கி வேரை காப்புக் கட்டி தாயத்தில் அடைத்து வைத்திருக்கும் பெண்களின் பாச்சாவும் இதனிடம் பலிக்காது , உடலுறவின் போது திடீரென குறி சுருங்கிப் போகும் பாதிப்பையும் இது போக்கும்.இது என்னவென்று தெரியாதவர்களுக்கு படத்துடன் ஒரு பதிவு இனிமேல் வெளிவரும் பாருங்கள்.
20) அத்தி விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் அத்தி விதை இதில் மிகச் சிறந்தது.அத்தி என்றால் யானை . யானை போல பலமும், விந்து விருத்தியும் , போக சக்தியையும் தர வல்லது.
21)அரச விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் அரச விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் அரசன் இது . இதன் விதை விந்து விருத்தியையும் தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர வல்லது.”அரச மரத்தைச் சுற்றி வந்து அடி வயிற்றைத் தொட்டுப்பார்” என்று பெண்களுக்குச் சொல்வார்கள். அரச மரக் காற்றே பெண்களின் கர்ப்பப் பையில் உள்ள நுண்கிருமிகளைக் கொன்று , கரு முட்டை நன்கு வளர்ச்சியுற உதவி , கரு முட்டையை வெளிப்படுத்தி கர்ப்பப் பையை தயார் நிலையில் வைத்து குழந்தைப் பேற்றைத் தர வல்லது .பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .இந்த மரத்தை வெட்டினால் குழந்தைப் பேறு இருக்காது என்றும் அது கூறுகிறது .இவ்வளவு பெருமை வாய்ந்த அரச விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
22) ஆலம் விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் ஆல விதை இதில் மிகச் சிறந்தது.மரங்களின் பெரிய மரம் இது . இதன் விதை விந்து விருத்தியையும் தந்து , விந்தணுப் பெருக்கத்தையும்,தந்து குழந்தைப் பேற்றையும் தர வல்லது.பொதுவாக இம்மரத்தை வளர்த்தாலே குழந்தைப் பேறு கிட்டும் என்று விருட்ச சாஸ்திரம் சொல்கிறது .ஒரு படையையே இந்த மரம் தன்னுடைய நிழலில் காக்கும் அளவு பெரியதாக வளரும் தன்மை படைத்தது .தன் விழுதுகளால் எளிதில் விழாமல் அழியாமல் வெகுநாள் வாழும் தன்மை வாய்ந்தது. இவ்வளவு பெருமை வாய்ந்த ஆல விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
23) முருங்கை விதை:-பொதுவாக விதைகள் , பருப்புக்கள், கொட்டைகள் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் முருங்கை விதை இதில் மிகச் சிறந்தது..இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கை விதை அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
* முருங்கைப் பூ:-பொதுவாக முருங்கையின் அத்தனை பாகங்களும் ஆண்மை வீரியத்தைப் பெருக்கும் .அதிலும் முருங்கைப் பூ இதில் மிகச் சிறந்தது.இவ்வளவு பெருமை வாய்ந்த முருங்கைப் பூ அற்புதமான ஆண்மை விருத்தியைத் தர வல்லது .
.
.சாரப்பருப்பு:-சாரப் பருப்பினால் சிறுநீரைப் பற்றிய கடுஞ்சுருக்கு , மூத்திரக் கடுப்பு , சலப் பிரமேகம் நீங்கும் , நீற்றுப் போன சுக்கிலம் (விந்து ) இறுகும் , இரசகந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும் . மூத்திர வர்த்தனகாரி , காம விர்த்தினி , சமனகாரி போன்ற செய்கைகளை உடையது .
மேற்படி லேகியத்தை காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு பெரு நெல்லிக்காயளவு சுவைத்துச் சாப்பிட்டு , சுண்டக் காய்ச்சிய பாலை அருந்திவர மேலே கண்ட சுப பலன்கள் உண்டாகி நல்ல தாது விருத்தி உண்டாகும் . மேலான போக சக்தி தேவைப்படுபவர்கள் இரவு படுக்கப் போகும் முன் ஒரு பெரு நெல்லிக்காயளவு சாப்பிட்டு பேரீச்சம் பழம் , அத்திப்பழம் , கிஸ்மிஸ் பழம் ,அல்லது கருப்பு கிஸ்மிஸ் பழம் (ஆங்கூர் திராட்சை ) பிய்த்துப் போட்டு சுண்டக் காய்ச்சிய பால் 100 மிலி குடிக்க அன்று மிகமிக நல்ல இரவாகும் .